பெரும்போகத்துக்கான நெல் கொள்வனவு இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம் ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கத்திடம் உள்ள அரிசி கையிருப்பை அதிகரிக்கவும் , லங்கா சதொச நிறுவனங்களின் ஊடாக அரிசி விற்பனையை விரிவுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து அதிகளவான நெல்லை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇