பொருளாதாரக் கண்ணோட்டமொன்றில் 2024ஆம் ஆண்டு பற்றிய மீள்பார்வை, இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்கள பணிப்பாளர் கலாநிதி சுஜீதா ஜெகஜீவனால் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு எதிர்கொண்ட பல சவால்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு தளர்த்தப்பட்டுள்ளமையினால் 2024ஆம் ஆண்டானது இலங்கையின் பொருளாதாரப் பயணத்தில் நினைவுகூரப்பட வேண்டியதோர் ஆண்டாகக் காணப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என்பன உள்ளடங்கலாக 2019 தொடக்கம் தொடர்ச்சியான பொருளாதார அதிர்வுகளுக்குப் பின்னர் இலங்கை இயல்புநிலைக்குத் திரும்புகின்றது.
உலகளாவிய பொருளாதாரமும் பொருளாதார வளர்ச்சி மெதுவடைந்திருந்த போதிலும் அஞ்சப்பட்டளவு பாதகமற்ற மந்தநிலையொன்றுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பொருளாதார தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையொன்றினை வெளிப்படுத்தியது.
அதேவேளை, புவிசார் அரசியல் நிலைமைகள் சாதகமற்றவையாக மாற்றமடைந்தன.
இவற்றைப் பற்றிய அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇