இலங்கையில் ஆண்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிர்மாய்ப்பு – உலக சுகாதார ஸ்தாபனம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் ஆண்கள் மத்தியில் மனச்சோர்வு மற்றும் பதற்றம் அதிகரிப்பதே அதிக உயிர்மாய்ப்பு விகிதங்களுக்குக் காரணமாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

ஆண்களின் உயிர்மாய்ப்பு விகிதம் உலக சராசரியை விட அதிகமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட தரவுகளின்படி,

இலங்கையில் ஒரு இலட்சம் ஆண்களுக்கு 27 பேர் மற்றும் ஒரு இலட்சம் பெண்களுக்கு 5 பேர் என்ற அடிப்படையில் உயிர்மாய்ப்பு விகிதங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்த மக்கள் தொகையில் ஒரு இலட்சம் பேருக்கு 15 பேர் என்ற அடிப்படையில் உயிர் மாய்ப்பு விகிதம் காணப்படுகின்றது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி, இலங்கையில் ஆண்களுக்கான உயிர்மாய்ப்பு விகிதம், உலகளாவிய சராசரி விகிதமான ஒரு இலட்சம் பேருக்கு 10.5 என்ற எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது. 

2022 ஆம் ஆண்டில் உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வின்படி, இலங்கையில் உயிர்மாய்ப்பு விகிதம் வயதிற்கு ஏற்ப அதிகரிக்கிறது. 

ஆண்களில் 55 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடமும் இளம் பெண்களில் 17–25 வயதுக்குட்பட்ட பெண்களிடமும் உயிர்மாய்ப்பு சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவிக்கையில், உலகளவில் ஒவ்வொரு 100 மரணங்களில் ஒன்றிற்கு மேல் உயிர்மாய்ப்பு காரணமாக நிகழ்கிறது. 

ஒவ்வொரு உயிர்மாய்ப்பு மரணத்திற்கும், 20க்கும் மேற்பட்ட உயிர்மாய்ப்பு முயற்சிகள் நடைபெறுகின்றன. 

2019 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 703,000 பேர் உயிர்மாய்ப்பு மூலம் உயிரிழந்துள்ளனர் (ஒரு இலட்சம் பேருக்கு 9 பேர்). 

உலகளாவிய உயிர்மாய்ப்பு சம்பவங்களில் 77 சதவீதம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன. 

2019 ஆம் ஆண்டில், 15–29 வயதுக்குட்பட்டவர்களில் நான்காவது முக்கிய மரணத்திற்கான காரணமாக உயிர்மாய்ப்பு இருந்துள்ளது, இது அனைத்து மரணங்களிலும் 8 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects