மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் விடுத்துள்ள வேண்டுகோள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் தனியார் கல்வி நிலையகளின் செயற்பாடுகளை இரு வாரங்கள் நிறுத்துமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் இன்று (26.02.2026) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த க.பொ.த. சாதாரன தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு ஓய்வினை வழங்கும் வகையில் அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை இரு வாரங்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் கல்வி நிலையங்களின் சுகாதார வசதிகள் மற்றும் கற்றல் செயற்பாடுகளுக்கு ஏற்றவகையில் நிலையங்கள் காணப்படுகின்றதா என மாநகர சபையினால் உறுதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவுறுத்தலை கடைப்பிடிக்காத தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக மாநகர சபை கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects