கடந்த 4, 5, 6 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, வாக்களிக்கத் தவறிய அரச ஊழியர்களுக்கு இன்றும் (11.09.2024) நாளையும் (12.09.2024) வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் தங்கள் பணியிடம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் தங்களது வாக்கை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றவர்களில் 98 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு அளிக்கப்பட்ட அஞ்சல் மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளில் 85 சதவீதமானவற்றை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளதாக கொழும்பில் 10.09.2024 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇