இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டத்தின் கீழ் இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தும் நிகழ்வு 07.03.2026 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் “நல்லிணக்கத்துக்கான உறவுப் பயணம்” எனும் கருப்பொருளில் இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு ஏறாவூர் பற்று ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்றது.
இவ் வேலைத்திட்டத்தில் அனுராதபுர மாவட்ட இளைஞர் கழகத்தினை சேர்ந்த சகோதர மொழி பேசும் இளைஞர்கள் ஆறுமுகத்தான் குடியிருப்பில் ஆறு நாட்கள் இளைஞர் கழக அங்கத்தவர்களின் வீடுகளில் தங்கியிருந்து எமது கலை கலாசாரம் பண்பாடு விழுமியங்களை அறிந்து கொண்டு சகோகோதரத்துவத்தினை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பா.கிஸ்கந்தமுதலியின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையில் ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் சஜீவ் தலைமையில் ஆறுமுகத்தான் குடியிருப்பு விபுலானந்தா இளைஞர் கழக தலைவர் சுவர்ணாஸ் மற்றும் கழக அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் கலாசார விளையாட்டு நிகழ்வானது ஏறாவூர் பற்று ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராம காளி கோவில் மைதானத்தில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் திரிந்து சமன் ஹென் நாயக்க கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் நிசாந்தி அருள்மொழி, மாவட்ட அதிகாரிகளான எம்.சசிகுமார், அ.தயாசீலன், விவசாய அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுராதபுர மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள், ஏறாவூர் பற்று ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராம மக்கள், இளைஞர் யுவதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










