187 வழித்தடத்தில் இயங்கும் கொழும்பு கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10.01.2025) முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
விமானப் பயணிகளின் வசதிக்காக இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின்பு கொழும்பு கோட்டை – கட்டுநாயக்க பேருந்துகள், விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றன.
இருப்பினும், விமான நிலையத்தில் தரித்து நின்று இப் பேருந்து சேவையை இயக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇