அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு உரங்களின் விலையேற்றமே பிரதான காரணம் என்று அதன் தலைவர் ஜெயந்த சமரகோன் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை , 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வடக்கு தென்னை முக்கோணத்தில் தென்னைச் செய்கைக்காக அரசாங்கம் 1,437 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் 40,000 ஹெக்டேயர் தென்னை மரங்களை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 1,437 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் 21.01.2025 அன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது கூறினார்.
நாட்டிலுள்ள 05 ஹெக்டேயருக்கும் குறைவான தென்னந்தோப்புகளுக்கு இலவச உரம் வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வாய்மொழி மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500 மெற்றிக் தொன் தென்னைச் செய்கைக்காக ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொடரும் தேங்காய் பிரச்சினையால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 250 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










