புத்தாண்டின் முதல் மூன்று வாரங்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது.
அதன்படி , சுற்றுலா மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையில் , ஜனவரி 1 முதல் 19 ஆம் திகதி வரை 153,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
அதன்படி, நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 27,166 இந்தியர்கள் 22,033 ரஷ்யர்கள் மற்றும் 9,763 பிரித்தானிய பிரஜைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் , கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 102,545 ஆகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










