கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் பயிர் விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எந்திரி.ஜீ.அருணன் தலைமையில் கோறளைப்பற்று வடக்கு கலாசார நிலையத்தில் (14.02.2024) அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட விவசாயப்பணிப்பாளர் ஜனாப் எம்.எப்.ஏ.ஸனீர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் எஸ்.தனிநாயகம், விவசாய போதனா ஆசிரியர்கள், பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்
இதன் போது பிரதம அதிதியாக கந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரனினால் பயனாளிகளுக்கான பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பபட்டது.
விவசாய அமைச்சின் அனுசரணையின் கீழ் உப உணவு உற்பத்தியினை மாவட்டத்தில் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 226 பயனாளிகளுக்கான 1087.5 கிலோ பயறு விதைகள் 108 ஏக்கர் பயிர் செய்கை நிலத்தை இலக்காகக் கொண்டு இவ் ஆண்டிற்கான சாகுபடியினை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டது.
கடந்த வருடம் உப உணவு பயிர் சாகுபடியில் சிறந்த விளைச்சல் வாகரையில் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
.இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇