விமானப்படையின் புதிய தளபதி நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் 27.01.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

விமானப்படையின் 20 ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க வரலாற்றில் இணைகிறார்.

ஜனவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ , 29.01.2025 அன்று பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

வீர விக்கிரம விபூஷன, ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் ஆகிய மூன்று விருதுகளையும் ரணசூர பதக்கத்தையும் எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க பெற்றுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects