நாட்டில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிக்குன்குனியா நோய் என்பது நுளம்புகளால் பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சிக்குன்குனியா நோய் பரவல் தற்போது அதிகரித்துள்ளது.
கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, சருமம் கருத்தல் மற்றும் சோர்வு உள்ளிட்டவை சிக்குன்குனியா நோய்க்குரிய அறிகுறிகள் ஆகும்.
மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










