கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் S.விஜயநாயகத்தினால் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பாவனைக்கென ஓர் புதிய “ஸ்மார்ட் போர்ட்” எனப்படும் இலத்திரனியல் தொடுதிரைக் கரும்பலகை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இதனை பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வும், இதற்கென உருவாக்கப்பட்ட வகுப்பறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வும் 10-02-2025 அன்று கல்லூரி அதிபர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் பழையமாணவர் சங்கத் தவைவர் பொறியியலாளர் மயூரன், பிரதி அதிபர் சதீஸ்குமார், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
வைத்தியர் S.விஜயநாயகம் பாடசாலையின் அபிவிருத்திக்குப் பல்வேறு பங்களிப்புகளை வழங்கி வருபவர் எனவும், இவரால் 2005 ஆம் ஆண்டு இரண்டு இலட்சம் ரூபாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையான வைப்புக் கணக்கிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு கல்லூரியின் அபிவிருத்திக்காக பல வேலைத்திட்டங்கள் செய்யப்படுவதாகவும், அவ் வைப்புத்தொகையை இன்று மூன்று இலட்சமாக அவர் அதிகரித்ததாகவும் அதிபர் தெரிவித்தார்.
விஜயநாயகம், சாரணீயத்தில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான இராணி விருது (Queen’s Award) இனைப் பெற்று கல்லூரிக்குப் புகழ் சேர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










