Batti Big Bash Cricket Festival – Season 1 கிரிக்கட் சுற்றுப்போட்டி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

Batti Big Bash Cricket Festival – Season 1 கிரிக்கட் சுற்றுப்போட்டியில் Batticaloa Singing Fish அணி வெற்றி பெற்றது.

Batticaloa Cricket Development Council மற்றும் Batticaloa Masters Cricket Club ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற Batti Big Bash எனும் கிரிக்கட் திருவிழாவானது 19-04-2024 அன்று ஆரம்பமாகி அதன் இறுதிப்போட்டி கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் 28-04-2024 அன்று நடைபெற்றது.

Batticaloa Singing Fish, Eravur Eagles, Kattankudy Lions, Kokkatticholai Black Cats, Pasikkudak Sharks ஆகிய ஐந்து அணிகள் மோதிக்கொண்ட இந்த சுற்றுப்போட்டியில் மொத்தமாக 14 போட்டிகள் நடாத்தப்பட்டு நொக்கவுட் முறையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த Batticaloa Singing Fish மற்றும் Pasikkudah Sharks அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Pasikkudah Sharks அணி 20 ஓவர்களில் 133 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Singing Fish – Batticaloa அணியினர் 19.5 ஓவர்களில் 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றனர்.

Batticaloa Cricket Development Council இன் தலைவர் Felician Lopez இன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும், கௌரவ அதிதிகளாக தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் அனுஷா சமரநாயக்க, மட்டக்களப்பு கிரிக்கட் சங்கத் தலைவர் N.B.ரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ஹபீப் ரிபான் உட்பட பலரும், அனுசரணையாளர்கள், அணிகளின் ஆதரவாளர்கள், கிரிக்கட் இரசிகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வெற்றிபெற்ற Batticaloa Singing Fish அணியினருக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபாய் பரிசும் அதே போல இரண்டாமிடம் பெற்ற Pasikkudah Sharks அணிக்கு 7 இலட்சம் ரூபாயும், மூன்றாம் இடத்தினைப் பெற்ற Kokkatticholai Black Cats அணிக்கு 5 இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. அத்துடன் போட்டித் தொடர் முழுவதும் சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கும் சிறப்புப் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கட் விளையாட்டை அபிவிருத்தி செய்து சிறுவயதிலேயே கிரிக்கட் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் தேசிய ரீதியில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் தூர நோக்கில் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் மட்டக்களப்பு அணி இளம் வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கவும், இங்கிருக்கும் திறமைகளை தேசிய அளவில் வெளிக்கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாகவும் இலங்கை தேசிய அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் அனுஷா சமரநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரிக்கட் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கப்போவதாக இராஜாங்க அமைச்சரும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects