மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் அதனுடைய செயல்களினால் பாதிக்கப்பட்ட தொழில்களை விருத்தி செய்வதற்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் மாவட்டத்திலுள்ள சுய தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்க்கைக்கான வெளிச்சம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் மண்முனை வடக்கு மற்றும் ஏறாவூர் பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து தலா 4 நபர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்ட 8 நபர்களுக்கு, 6.3 இலட்சம் ரூபா பெறுமதியான மெழுகுதிரி உற்பத்திக்கான செயன்முறை பயிற்சியுடன் அதற்கான மூலப் பொருட்கள் மற்றும் அச்சுகள் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் அனுராதி பெரேரா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் இழப்பீடுகளுக்கான உத்தியோகத்தர் அருண் பிரதீபன், மாவட்ட உத்தியோகத்தர் இ.தினேஸ்குமார், பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇