மட்டக்களப்பு கல்லடி தமிழருவி கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர்தின விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) தமிழருவி இல்லத்தில் இடம்பெற்றது.
தமிழருவி கலைக்கூட ஆசிரியர் எஸ்.சிவநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணர்களினால் சிறுவர் மற்றும் முதியோர்களின் பெருமைகளை எடுத்தியம்பும் வகையில் பல்வேறு பாடல், ஆடல், கதை, நாடகம் போன்றவை அரங்கேற்றப்பட்டன.
இதன்போது மாணவர்களால் பல்வேறு சிற்றுண்டி வகைகள் பரிமாறப்பட்டதோடு, வாழ்த்துக்களும் பரிமாறப்பட்டன.