பண்டாரவளையில் நவீன வசதிகளுடனான ரயில் நிலையம் திறந்து வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பண்டாரவளை புகையிரத நிலையத்தில் புதிய புகையிரத பாதை உபகரண அறை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஓய்வு அறை மற்றும் உணவகம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய கட்டிடத் தொகுதியை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையின் மிகவும் கவர்ச்சிகரமான ரயில் நிலையங்களில் ஒன்றான பண்டாரவளை ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ரயில்வே திணைக்களம் இந்தப் புதிய கட்டிடத் தொகுதியை நிர்மாணித்துள்ளது.

குறித்த ரயில் நிலையமானது 1893 இல் நிறுவப்பட்டது.

பண்டாரவளை புகையிரத நிலையத்தை சூழவுள்ள பிரதேசத்திற்கு புதிய பெறுமதியை சேர்க்கும் இந்த சந்தர்ப்பத்தில் பங்களிப்பை வழங்குவதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்

மலையக ரயில் பாதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பகுதி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் விளைவாக, நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் ஒரு பெரிய டாலர் வருமானம், உள்ளூர் தயாரிப்புகளுக்கு அதிக தேவை மற்றும் முதலீட்டுத் தொகை கிடைக்கிறது. நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாகின்றன. இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுகிறது.

இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு உயர்தர வசதிகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுலா ஈர்ப்பை அதிகரிக்க முடியும். சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதில் பெரும் முதலீடுகளைச் செய்வதற்கு ரயில்வே துறைக்கு (RD) நிதி சிக்கல்கள் உள்ளதென அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects