கிழக்கு மாகாண ஆளுநருக்கும் ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகருக்குமிடையில் விசேட சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழலை உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற வைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை முறையாக பராமரிக்கும் சந்தர்ப்பத்தில் தான் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும். இதனால் கிழக்கில் சுற்றுச் சூழலை பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறும் முயற்சிகளில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.

அதன் ஒரு முக்கிய கட்டமாக சுற்றுச் சூழல் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெம் மற்றும் நோர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஸு கிளாடி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சுற்றுச்சூழலை உருவாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும் கிழக்கு மாகாண சுற்றுச்சூழல் சூழல் பாதுகாப்பு செயலாளர், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச சபை செயலாளர், நகரசபை செயலாளர் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் கிழக்கில் சுற்றுச் சூழல் பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை இன்று (02) திருகோணமலையில் உப்புவெளியில் அமைந்துள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப்பிரிவில் வைத்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects