நேற்று (15) நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை வெற்றி கரமாக நடைபெற்றதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினையான சூழ்நிலையும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக மாலிம்படை சுமேத வித்தியாலய பரீட்சை நிலையத்திற்கு வருவதற்கு சிரமப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது .
எவ்வாறாயினும், பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு 40-45 நாட்கள் ஆகலாம், எனவே பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் உடனடியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇