நாடளாவிய ரீதியில் உறுமய காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்கான துரித தீர்வுகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, இந்த வருட இறுதிக்குள் 20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த திட்டத்திற்காக இந்த வருட பாதீட்டில் 2 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇