IMF முகாமைத்துவப் பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 17.02.2026 அன்று அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார்.

இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், அண்மைக்கால பொருளாதார மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) பாராட்டியதுடன், ’டிட்வா’ சூறாவளியானது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், அதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும் மீளெழும் திறனைக் கட்டியெழுப்புவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

’டிட்வா’ சூறாவளிப் பாதிப்பிற்குப் பின்னர் இலங்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்புகளைப் பிரதமர் பாராட்டினார். பொருளாதார வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி ஊடாக, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு நேரடியாகப் பயன்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை உறுதி செய்தல், சுற்றுலாத்துறையின் தரத்தை மேம்படுத்துதல், நிலையான முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதன் அவசியம் ஆகியன குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.

கல்வியை வெறும் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, திறன்கள் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மையமாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

இந் நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளரின் பணிக்குழாம் பிரதானி Andreas Bauer, ஆசிய பசிபிக் பிரிவின் பணிப்பாளர் Krishna Srinivasan, (மூலோபாய தொடர்பாடல் பிரிவுத் தலைவர்) கலாநிதி Pierre Mejlak), இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி Martha Woldemichael, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பிரதி ஆளுநர் கலாநிதி சி. அமரசேகர, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

(பிரதமர் ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects