நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சில பலசரக்கு பொருட்களை மீள் ஏற்றுமதிக்காக நாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
மிளகு, சாதிக்காய், மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பலசரக்கு பொருட்கள் மீள் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதன் மூலம் உள்ளூர் பலசரக்கு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇