நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 உயிரிழக்கின்றனர்.
அதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு ஐந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) மற்றும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு ஆகியவை சிறுநீர் வெளியேற்றத்தைக் குறைத்து, உடலின் அதிகப்படியான திரவத்தை அகற்ற இயலாமைக்கு வழிவகுக்கும். இதனால் பல சிக்கல்கள் ஏற்படும் என ஆலோசகர் சமூக வைத்தியர் சிந்த குணரத்ன தெரிவித்துள்ளார்.
சிறுநீரக நோய் தொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இத் தவலை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர்,
சிறுநீரக நோயின் அறிகுறிகள் தாமதமாகி வருவதால், தொற்றா நோய்கள் உள்ளவர்கள் சிறுநீரக பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










