மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டம் தொடர்பாக தெளிவூட்டல் செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வொன்று 24.06.2025 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த செயலமர்வினை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மதுசார பாவனையால் ஏற்படும் உடல் நல குறைபாடு மற்றும் குடும்ப நல பாதிப்பு ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புக்கள், சமூகப் பாதிப்புக்கள், பொருளாதார பிரச்சனை, சிறுவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாத்தல், போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த செயலமர்வினை மாவட்ட செயலகத்துடன் இணைந்து மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் ஏற்பாடு செய்திருந்ததுடன், செயலமர்வின் வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பிரதான வளவாளர் ஏ.சீ.எம்.ரஹீம் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டதுடன், சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட அதிகாரி நிதர்சனா நிகழ்வில் கலந்து கொண்டார்.

செயலமர்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு – வவுணதீவு, கோறளைப்பற்று – வாழைச்சேனை, பட்டிப்பளை – கொக்கட்டிச்சோலை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 கிராமங்களில் போதைப்பொருள் அற்ற மாதிரிக் கிராமத்தினை உருவாக்கும் திட்டமொன்று மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளமை தொடர்பாக இதன் போது அதிகாரிகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects