கல்வி அமைச்சின் வழிகாட்டுதலில் கல்வித் திணைக்களம் நடாத்திய பரதநாட்டிய கர்நாடக சங்கீதப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் அதிபர் எஸ் .பிரான்சிஸ் தலைமையில் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்றது. .
இந் நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி பணி மனையின் பிரதி கல்வி பணிப்பாளர் ஹரிஹரராஜ், மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி நீலமானந்தராஜ் மகராஜ், இலங்கை வங்கியின் கல்லடி கிளை முகாமையாளர் ஏ. எம் .பாரூக் மண்முனை வடக்கு கோட் டக்கல்வி பணிப்பாளர் ஆர் .ஜே பிரபாகரன் , இப்பாடசாலையில் முன்னாள் அதிபர்களான திருமதி டீ. அருட் ஜோதி, ஏ. ராசு எனப்பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கல்வித் திணைக்களம் அனுராதபுரத்தில் நடத்திய இந்த தேசிய மட்ட போட்டி நிகழ்ச்சியில் அகில இலங்கை ரீதியாக முதன்மை இடத்தை பெற்ற கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்யாலய மாணவ மாணவியர்கள் விருதுகள் , பரிசில்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில் தனி இசை ஜாவலி போட்டியில் மட்டத்தில் மூன்றாம் இடம் பெற்ற இப் பாட சாலையில் எட்டாம் ஆண்டு மாணவரான மகேசன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அத்தோடு இந் தேசிய மட்டப் போட்டி நிகழ்வில் குழு போட்டியான மீனவ நடனம் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது .இந்த மீனவ நடனத்தை ஒழுங்கமைத்த ஆசிரியை திருமதி சந்திரவதனி சந்திரலிங்கம் மற்றும் தனி இசையை பயிற்றுவித்த திருமதி பிலோமி சஜித் ஆகியோரும் இப்பரிசளிப்பு விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந் பரிசளிப்பு நிகழ்வில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணை குழுவினால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்க போட்டியில் பாடசாலை மட்டத்தில் பாதுகாப்பு விவசாய பிரிவில் இரண்டாம் இடமும் திறந்தமட்ட விவசாய பிரிவில் மூன்றாம் இடம் பெற்ற ஒன்பதாம் ஆண்டு மாணவன் சக்திகுமார் பிரதீப் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇