நாட்டுக்கு வருகை தந்துள்ள 6 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 613,728 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 98,420 ஆகும்.

அதன்படி, ரஷ்யாவிலிருந்து 80,953 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 58,124 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 43,265 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 34,659 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 37,119 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 22,770 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects