2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு 3,000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் (28.02.2026) நாளையுடன் நிறைவடையவிருந்தது.
இந்த நிலையில், தற்போது அதன் செல்லுபடியாகும் காலம் 15.03.2026 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் அனைவரும் மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமது வவுச்சர்களைப் பயன்படுத்தி பாதணிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










