மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக பொருளாதார நிலையங்களுக்கு மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் வாடிக்கையாளர்கள் குறைவடைந்துள்ள போதிலும், பொருளாதார மத்திய நிலையங்களை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொருளாதார மத்திய நிலையங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி சந்தைகளில் இடைத்தரகர்களின் செயற்பாடும் விலை உயர்வுக்கு காரணம் என அவர்கள் தெரிவிகின்றனர்.
இந்த இடைத்தரகர்கள் அந்த மையத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு கரட்டை விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது.
ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 800 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த இடைத்தரகர்கள் கரட்டை 1,100 ரூபா முதல் 1,800 ரூபா வரை விற்பனை செய்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇