அகில இலங்கை பாடசாலை மட்ட பரத நாட்டிய, கர்நாடக சங்கீத தேசிய மட்ட நிகழ்வுகளில் மட்/ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவிகள் தனி வாத்திய இசையில் (வயலின்) செல்வி லோ. டனிஷா முதலாம் இடத்தினையும், திறந்த போட்டி நாட்டிய நாடகம் மூன்றாம் இடத்தினையும், பரத நாட்டிய சாஸ்திரியம் சிரேஷ்ட பிரிவு காவடிச்சிந்து செல்வி சி.தயோமிகா மூன்றாம் இடத்தினையும் பெற்றுகொண்டனர்.
இதற்கு பாடசாலை அதிபர் திரு.செ.ரவிச்சந்திரன் வழிகாட்டலிலும், நடன ஆசிரியை திருமதி.பவித்ரா சுரேந்தர், சங்கீத ஆசிரியை செல்வி உஜேனிதா ஆகியோரின் நெறியாழ்கையிலும், நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் திரு.கு.சுபகாந்தன் உதவியும் இம்மாணவிகள் இவ் இடங்களை பெற்றுக்கொள்ள பங்களிப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇