இலங்கைக்கு ரஷ்யாவில் இருந்து கிடைத்த மனிதாபிமான உதவி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைப் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளது. 

அதன் பிரகாரம், 35 மெட்ரிக் தொன் அளவுடன் கூடிய மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டதாக, இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர இன்று (10.12.2025) தெரிவித்துள்ளார். 

 “டித்வா” புயலின் தாக்கம் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தம் ஆகும்.

இப் புயலின் தாக்கம் காரணமாக 639 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 10% வீதமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects