மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தேர்தல் முறைகள் மற்றும் சட்ட கட்டமைப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வொன்று கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் (RDPO) ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் வி.ரமேஷானந்தன் தலைமையில் Y.M.C.A மண்டபத்தில் 06.03.2024 அன்று இடம்பெற்றது.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் (RDPO) ஏற்பாட்டில் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (Centre for monintoring Election violence) பங்கு பற்றுதலுடன் இச் செயலமர்வு இடம்பெற்றது.
செயலமர்வின் வளவாளராக ஓய்வு பெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முகமட் , வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலைய தேசிய இணைப்பாளர் ஏ.எம்.என். விக்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டனர்.
இச்செயலமர்வில் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் கொள்வனவு உத்தியோகத்தர் பீ.மேகலநாதன், கள உத்தியோகத்தர் எஸ்.உபதாரணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் (RDPO) ஊடாக சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் இச் செயலமர்வு இடம் பெற்றதுடன், கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பானது சுமார் 21 வருடகாலமாக மாவட்டத்தில் சேவையாற்றி வருவதுடன், பாலூட்டும் தாய்மார்களுக்கு போசாக்கான சத்துமா வழங்குதல், போசனை குறைந்த சிறார்களுக்கு உணவு விநியோகம், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல் போன்ற பல்வேறுபட்ட செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇