மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர் விடுதிக்கு மெத்தைகள் வழங்கிவைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கனவு மெய்ப்பட – பொறியியற்பீடம் நோக்கி எனும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மெதடில்த மத்திய கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மெத்தைகள் வழங்கும் நிகழ்வு 31-01-2025 அன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஆர். பாஸ்கரனின் தலைமையிலும், இவ் விசேட வேலைத்திட்டத்தின் இயக்குநரும், பொறியியலாளருமான யோ.கோபிநாத்தின் ஏற்பாட்டிலும் நபைபெற்ற இந் நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும், பொறியியலாளருமான ஞானாகரன் கலந்து கொண்டு மெத்தைகளைக் கையளித்தார்.

சிங்கப்பூர் வாழ் நன்கொடையாளர்களின் நிதியில் மடிக்கக்கூடிய வகையிலான 60 மெத்தைகள் கையளிக்கப்பட்டதுடன் இதற்கான இணைப்பாளராக ஞானாகரன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனவு மெய்ப்பட எனும் விசேட வேலைத்திட்டம் கடந்த பல வருடங்களாக மிகவும் வினைத்திறனுடன் செயற்படுத்தப்படுவதுடன் இது பாடசாலைக்கு மட்டுமன்றி மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதாக அதிபர் தெரிவித்தார்.

இவ்விடுதியில் பல்வேறு தேவைகள் காணப்படுவதாகவும், நலன்விரும்பிகளின் இவ்வாறான உதவிகள் மூலமாகவே அவை பூர்த்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்த கோபிநாத், ஞானாகரனுக்கும், சிங்கப்பூர் வாழ் நலன்விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects