மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புற்று நோயாளிகளுக்கு சென்டினல் நோட் பயாப்ஸி எனும் பரிசோதனை…..

இன்றைய சூழலில் எம்முடைய பெண்மணிகளுக்கு மார்பகப் புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகிய புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. இத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வைத்திய நிபுணர்கள் நோயாளிகளிடத்தில் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.

சிலருக்கு மார்பக புற்று நோய் தொடர்பான பரிசோதனை மேற்கொண்ட பின் ஒருங்கிணைந்த சிகிச்சை அல்லது சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவர். சிலருக்கு இத்தகைய சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகும் சென்டினல் நோட் பயாப்ஸி என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பிரத்யேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துவர்.

இத்தகைய பரிசோதனை ஏன் மேற்கொள்ளப்படுகிறது? என்பது பல நோயாளிகளுக்கு புரியாத புதிராகவே இருக்கும். இந்நிலையில் இது தொடர்பான மருத்துவ ரீதியிலான விளக்கத்தை வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.

மார்பக புற்றுநோய் ஏற்பட்ட இடத்திலிருந்து அவை வேறு இடங்களுக்கு பரவி இருக்கிறதா? இல்லையா? என்பதை துல்லியமாக அவதானிக்க.. சென்டினல் நோட் பயாப்ஸி எனப்படும் நிண நீர் முனைகளில் திசு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக இத்தகைய நிணநீர் முனை அல்லது நிணநீர் முடிச்சுகள் மார்பகத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கும் அக்குள் பகுதியில் அமையப்பெற்றிருக்கும். அங்கு சிறிய அளவிலான நுண்துளை சத்திர சிகிச்சை மூலம் இத்தகைய பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.‌

இந்த பரிசோதனையின் முடிவில் மார்பக புற்றுநோய் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் வெற்றி வீதமும், மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகான வேறு எங்கேனும் பரவி இருக்கிறதா? என்பது குறித்தும் துல்லியமாக அவதானிக்க இயலும். பலருக்கு இத்தகைய பரிசோதனைக்குப் பிறகு சத்திர சிகிச்சை அவசியமாக மேற்கொள்ள வேண்டியதில்லை என்ற சூழல் உண்டாகும்.

இத்தகைய பரிசோதனை மார்பக புற்றுநோய் மட்டுமல்லாமல் எண்டோமெட்ரியல் , மெலனோமா எனப்படும் புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஆகிய பாதிப்புகளின் போதும் மேற்கொள்ளப்படுகிறது.

அதே தருணத்தில் வேறு சிலருக்கு பெருங்குடல் -கர்ப்பப்பை வாய்- உணவுக் குழாய் -தலை மற்றும் கழுத்து -வயிறு – தைரொய்ட்- சிறிய செல்களற்ற நுரையீரல் – ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பின் போதும் இத்தகைய பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

வைத்தியர் கௌதமன்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects