மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கமானது இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்துடன் நேரடியாக இணைந்து செயற்படுவதற்கான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முதளிதரன் தலைமையில் புதிய மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.09.2025 அன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் இருவரினது அங்கிகாரத்துடன் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்துடன் நேரடியாக இணைந்து செயற்படுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மாவட்ட பூப்பந்தாட்ட சங்கமானது கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் ஓர் இணை சங்கமாகவே செயற்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பூப்பந்தாட்ட வீரர்களை உருவாக்குவதற்கும் அவர்களுக்கு தேவையான விடயங்களை துரிதமாக மேம்படுத்துவதற்கும் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்துடன் நேரடியாக இணைந்து செயற்படுவதற்கான கலந்துரையாடலாக இடம்பெற்றது.
கடந்த காலங்களில் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தினால் கிடைக்கின்ற உதவிகள் முறையாக கிடைக்கப்பெறுவதில் தாமதங்கள் காணப்பட்டமையால் மாணவர்கள் மற்றும் வீரர்களுக்கான பயிற்ச்சிகள், சுற்றுப்போட்டிகள் போன்றவற்றை சுயமாக எமது சங்கத்தினால் மேற்க்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கமானது நேரடியாக இலங்கை பூப்பந்தாட்ட நிறுவனத்துடன் இணைவதென தீர்மானித்த விதிகளுக்கு அமைவாக விண்ணப்பித்திருந்தனர்.
இம்முயற்ச்சியானது 08.09.2025 அன்று இலங்கை பூப்பந்தாட்ட நிறுவனத்தின் தலைவர் ரொசான் குணவர்த்தன மற்றும் பொது செயலாளர் அஜீத் விஜேயசிங்க, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சினி முகுந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்திற்கான பதிவு நடைபெற்றது.
இனிவரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட சங்கமானது நேரடியாக இலங்கை பூப்பந்தாட்ட நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் என தெரிவிக்கப்பட்டது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










