மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 15.03.2024 அன்று நடைபெற்றது.
இப்போட்டியானது மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி நிமலினி பேரின்பராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிர்வாகத்திற்க்கான பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி.எஸ்.ரவிராஜா, சிறப்பு அதிதியாக கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ரீ.உதயகரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் மண்முனை வடக்கு ஆர்.ஜே.பிரபாகரன், உடற்கல்விக்கான உதவிக்கல்வி பணிப்பாளர் வி.லவக்குமார்மற்றும் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலையின் பிரதி அதிபர், மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதி அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் அணி நடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன், முதலாம் இடத்தை 291 புள்ளிகளைப் பெற்று சாரதா இல்லமும், இரண்டாம் இடத்தை 268 புள்ளிகளைப் பெற்று அருந்ததி இல்லமும், மூன்றாம் இடத்தை 259 புள்ளிகளைப் பெற்று நல்லாகினி இல்லமும் பெற்றுக் கொண்டன.
இதன் போது பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇