மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மாவட்டத்தைச் சேர்ந்த மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திர காந்தனின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுடன் நீதியமைச்சர் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இக் கலந்துரையாடலில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராதா ஜெயரத்தின, நீதியமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், அமைச்சின் உயரதிகாரிகள், மத்தியஸ்தர் சபை பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கள் சிறந்த முறையில் செயற்படுவதன் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியுமென இதன் போது நீதியமைச்சர் மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டதுடன், அவர்களது குறைகளை கேட்டறிந்த நீதியமைச்சர் மிக விரைவில் அவர்களது குறைகள் அனைத்தையும் நிவர்த்திப்பதற்கான நடவடிக்கையினை தான் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇