மட்டக்களப்பில் கே.கே.சண்முகம் அறக்கட்டளையால் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த சாரண மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் .
இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்குமிடையிலான 30 கிலோமீட்டர் கடலை நீந்திக் கடந்து சாதனை நிலைநாட்டியுள்ள மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்களுக்குமான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு கடந்த திங்கட்கிழமை (23) மட்டக்களப்பு (சிங்கிங் பிஸ்) சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கே.கே.சண்முகம் அறக்கட்டளையின் அனுசரணையில் அதன் ஸ்தாபகர் ச.சண்முகேசனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வரவேற்பு கௌரவிப்பு நிகழ்வில், சாதனை புரிந்த மாணவர்களுக்கு அரசியல்வாதிகளும், வர்த்தக பிரமுகர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகளும் நீச்சல் சாதனை புரிந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா), மட்.புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் யோசப், முன்னாள் அதிபர் பயஸ் ஆனந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்த பிரதீபன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா, மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எஸ்.ரஞ்சிதமூர்த்தி, மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் உப தலைவர் கலீல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇