2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் ஆரம்பமாகின்றது.
அதன் பிரகாரம் இன்று (18.02.2025) முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.
இந் நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி , மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பாதீட்டின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










