தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
கம்பன் விழாவானது 03.04.2026 அன்று வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்றது.
சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.
இங்கு கருத்துரைத்த ஜனாதிபதி இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் கூடிய தர்மத்தின் வழியில் வழிநடத்துவதற்கு கம்பன் கழகம் ஆற்றிவரும் சேவையை பாராட்டினார்.
இதன்போது ஜனாதிபதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










