கடந்த நவம்பர் 18 ஆம் திகதி கொடகமவிற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில், புகையிரதத்திற்கு அடியில் சிக்கிய பெண் இராணுவ சிப்பாய் ஒருவரைத் துணிச்சலுடன் செயற்பட்டு காப்பாற்றிய பொதுமகன் சிந்தக கமகேவுக்கு இராணுவத் தளபதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் தனது உயிரைப் பொருட்படுத்தாது புகையிரதத்தத்திற்கு அடியில் சென்று காயமடைந்த சிப்பாயை பாதுகாப்பாக மீட்டதுடன், அவரை மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அவரை இராணுவத் தலைமையகத்தில் வைத்து 25.11.2026 அன்று சந்தித்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, அவரது துணிச்சல், மனிதாபிமானம் மற்றும் தன்னலமற்ற செயற்பாட்டைப் பாராட்டியுள்ளார்.
அவசர நிலைமைகளில் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற முன்வருவது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய உயரிய மனிதப் பண்பு எனவும் இராணுவத் தளபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








