பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகளை 15.06.2026 அன்று அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்தும், இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்ட இக் கலந்துரையாடல் சுமூகமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்தது.
வர்த்தகம், முதலீடு, நிலையான அபிவிருத்தி, பெண்களின் நலன் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர்.
பாலின சமத்துவத்தை முன்னெடுப்பதற்கும், அரச நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, தற்போதுள்ள சவால்கள் மற்றும் பெண்களின் அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தொடர்ச்சியான கொள்கை ரீதியான ஆதரவு, திறன் அபிவிருத்தி தொடர்பான முன்னெடுப்புகள் மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களின் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இச் சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno, ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் பிரதித் தலைவர் Ms. Galija Agiseva, இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
(பிரதமர் ஊடகப் பிரிவு)





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










