இன்று முதல் ஆரம்பப் பிள்ளைப்பருவப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய தேசிய வாரம் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஆரம்பப் பிள்ளைப்பருவப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய தேசிய வாரம் இன்று (14.07.2026) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

‘மலரும் சிறுவர் உலகிற்கு – சூரிய கதிராகும் மகிழ்ச்சியான குடும்பம்’ என்ற கருப்பொருளின் கீழ் இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்த தேசிய வாரம் நடத்தப்படவுள்ளது.

உடல், உள – சமூக மற்றும் அறிவுசார் வளர்ச்சி கொண்ட இலங்கை ஆரம்பப் பிள்ளைப்பருவ சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த வாரத்திற்கு இணையாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆரம்பப் பிள்ளைப்பருவப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி குறித்து அறிவுள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதும், அது தொடர்பான தரமான சேவைகளைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு விளக்குவதும் இத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்,

“உடல், உள-சமூக மற்றும் அறிவுசார் வளர்ச்சி கொண்ட இலங்கை ஆரம்பப் பிள்ளைப்பருவ சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், ஆரம்பப் பிள்ளைப்பருவப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்கான திட்டங்கள் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையான வாரத்தில் செயல்படுத்தப்படுகின்றன.’மலரும் சிறுவர் உலகிற்கு – சூரிய கதிராகும் மகிழ்ச்சியான குடும்பம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆரம்பப் பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு குறித்த தேசிய வாரத்தை செயல்படுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதில் நாம் எதிர்பார்க்கும் முக்கிய நோக்கங்களில், ஆரம்பப் பிள்ளைப்பருவப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி குறித்து அறிவுள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவது அடங்கும். அதேபோல், ஆரம்பப் பிள்ளைப்பருவப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி சார்ந்த தரமான சேவைகளைப் பெற்றுக்கொள்வதன் தேவையையும் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் ‘உங்களது பிள்ளைக்காக நீங்கள் விழித்தெழுங்கள்’ என்பதை நாம் விழிப்புணர்வூட்ட வேண்டும்.” என்றார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects