கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மருதங்கேணி பிரிவின் குஞ்சன்கல் கிராமத்தில் வாழும் சுமார் 70 குடும்பங்களுக்கு சுத்தமான நீர் விநியோகத்தினை கிராம மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 12.03.2026 அன்று கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
குறித்த செயற்றிட்டம் சீரா நிறுவனத்தின் நிதிப்பணிப்பாளர் கிறிஸ்டி ஜேசுதாசனின் ஒழுங்குபடுத்தலில் Direct Help Water Swaziland அமைப்பின் செயற்றிட்ட முகாமையாளர் கணபதிப்பிள்ளை சுதாகரனின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டது.
இந்த செயற்றிட்டமானது 2.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கிராம மக்களால் இந்த செயற்றிட்டத்தின் பங்களிப்பாளரான கணபதிப்பிள்ளை சுதாகரன் மற்றும் அவருடைய துணைவியார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் கிராமத்தின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம், சீரா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் s பாஸ்கர், சீரா நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினர் கீர்த்தனா கிறிஸ்டி , குஞ்சன்கல் கிராம உத்தியோகத்தர் கு.டிலக்க்ஷன், மருதங்கேணி குளம் சமூகவலுவூட்டல் உத்திகோகத்தர் சுந்தரமூர்த்தி, கிராம சங்க உறுப்பினர் க.மகேந்திரன், ஸ்டார் சினேகம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிறுவனத்தினரிடம் கிராம மக்களின் வேண்டுகோளாக அப்பகுதியில் கைத்தொழில் பேட்டை ஒன்றையும் நிறுவித்தருமாறு கேட்டுக்கொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










