நாட்டின் கொழும்பு 07, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, பதுளை, மட்டக்களப்பு மற்றும் களுத்துறையில் ஆகிய பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெரும்பாலான நகரங்களில் நேற்று (03.03.2025) காற்றின் தரம் நல்ல நிலையிலும், யாழ்ப்பாணம், காலி, புத்தளம் மற்றும் பதுளையில் ஆகிய பகுதிகளில் மிதமான நிலை நிலையிலும் காணப்பட்டது.
இந் நிலையில் காற்றின் தரம் பெரும்பாலான நகரங்களில் இன்று (04.03.2025) 34 தொடக்கம் 64க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கொழும்பு 07, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, பதுளை, மட்டக்களப்பு மற்றும் களுத்துறையில் ஆகிய பகுதிகளில் மிதமான நிலையிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு நாட்டின் பெரும்பாலான நகரங்களில் நல்ல நிலையில் இருக்கும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










