ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி, அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக உரியத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய தினம் அஞ்சலிடப்படும் விண்ணப்பங்கள் செல்லுபடியாகாது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந் நிலையில் அதற்கான கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சிடல் செலவு மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு, வாக்குச் சீட்டின் நீளம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாகத் தேர்தலுக்கான அச்சிடல் செலவு அதிகரிக்கக்கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇