ஐந்தாம் தர புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தம் தொடர்பில் வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 30.09.2024 அன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஐந்தாம் தர புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் 3 கேள்விகள் அன்றி 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்பாகவே வெளியாகி இருந்ததெனவும், அப் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் பெற்றோர்கள், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects