அலுவலக உத்தியோகத்தர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சி நெறி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் வினைத்திறனை மேம்படுத்துவதையும், பொதுமக்களுக்கு எளிதாக மற்றும் விரைவாக சேவைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு “செயற்கை நுண்ணறிவு” தொடர்பான (“Artificial Intelligence”) (AI) பயிற்சி நெறி ஒன்று நடைபெற்றது.

இப் பயிற்சி நெறி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் 19.03.2025 அன்று பிரதேச செயலாளர் உ. உதயஶ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.

இப் பயிற்சிநெறியின் வளவாளர்களாக T. திருராஜ்கண்ணா (B.Eng, MBA, MSC-reading), N.M.M நுஹ்மான் (Master of Business Administration, B.Eng (Hons) in Software Engineering), மற்றும் J. கோமேதகன் (IT உதவிப் பயிற்சியாளர் மற்றும் உதவி விரிவுரையாளர்) ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியை ஆற்றினர்.

மேலும் பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு கற்றுக்கொண்டார்கள்.

பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் K. ரவீந்திரனால் இப்பயிற்சி ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects