தேர்தல் ஆணைக்குழுவினால் மாற்றுத் திறனுடைய வாக்காளர்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மாற்றுத் திறனுடைய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு  விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

அதன் அடிப்படையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மாற்றுத் திறனுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர்  ஒருவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மாற்றுத் திறனுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் உதவியாளர்கள் 18 வயதை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என்பதோடு தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளராக இருத்தல் கூடாது.

தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி ஒன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ, வாக்கெடுப்பு நிலையத்தின் முகவராகவோ இருத்தல் கூடாது.

மாற்றுத் திறனுடைய வாக்காளர்கள் தங்களது உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்ல தகுதிச் சான்றிதழ் ஒன்றை உரிய வாக்கெடுப்பு நிலையத்தின் அலுவலருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

தகுதிச் சான்றிதழை பெற்றுக்கொள்ள தேவையான விண்ணப்பங்களை கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் அல்லது https://www.elections.gov.lk/ என்ற தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects