அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு உடல் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு – வைத்தியர் இரா.முரளீஸ்வரன்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள், மயக்கம், உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு எனவே பொதுமக்கள் சிறுவர்களை பாதுகாத்துக் கொள்ள அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டுமென மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் கருத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் பொதுமக்கள் மேலதிகமான உடற்பயிற்சிகள், விளையாட்டு நிகழ்வுகள், உரியமுறையில் ஒழுங்குபடுத்தப்படாத களியாட்ட நிகழ்வுகள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு போதுமான அளவு குடிநீர் அருந்த வேண்டும்.

இந்த அதிக உஷ்ணத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு தேவையற்ற விதத்தில் நண்பகல் வேலைகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புக்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் கூடுதலாக சிறுவர்கள் அதிக அக்கறையுடன் செயல்படுவதுடன் இவ்வாறான காலகட்டங்களில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றுவதை தவிர்க்க வேண்டும்.

வயதானவர்கள் தேவையற்ற உடலை வருத்துகின்ற செயற்பாடுகளை தவிர்ப்பதுடன் பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் உஷ்ணத்தினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects