சிகிரியாவை பார்வையிட வந்த துருக்கிய யுவதியின் பணப்பையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இரண்டு புத்திசாலி சிறுவர்களின் உதவியால் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி சீகிரியாவை பார்வையிட வந்த துருக்கிய யுவதி ஒருவரின் பணப்பையை திருடர்கள் இருவர் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள் சந்தேகத்திற்கிடமான வகையில் வேகமாக செல்வதை அவதானித்த பாடசாலை மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளின் எண்ணை அவதானித்து பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மோட்டார் சைக்கிள் சுற்றி வளைத்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்ததோடு சம்பந்தப்பட்ட வெளிநாட்டு யுவதிடம் பணப்பையை மீட்டு கொடுத்தனர்.
சமயோசிதமாக செயற்பட்டு நாட்டுக்கு ஏற்படவிருந்த அவப்பெயரிலிருந்து காப்பாற்றிய சிறுவர்களை பொலிஸாரும் ஏனையோரும் பாராட்டியுள்ளனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
One Response
சூப்பர்டா தம்பிகளா. வாழ்த்துக்கள்